வெற்றிமாறனிடம் ஜூனியர் என்டிஆர் கோரிக்கை


ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப்அலிகான், பிரகாஷ்ராஜ், ஷைன் டாம்சாக்கோ உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தேவரா’. கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செப்.27-ல் வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

ஜூனியர் என்டிஆர் பேசும்போது, “சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன். ‘தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் சிறப்பானதாக அமையும். ‘பாகுபலி’க்குப் பிறகு சினிமா ஒன்றாகி விட்டது. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என்பது இல்லை.

நாம் வெவ்வேறு மொழி பேசினாலும் சினிமா என்றஒரே வார்த்தையில் ஒன்றிணைகிறோம். தமிழில் நான் நேரடிபடம் பண்ணுவது பற்றிக் கேட்கிறார்கள். அதை நான் எனக்குப் பிடித்தஇயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்கிறேன். சார், ஒரு நேரடி தமிழ்ப் படம் பண்ணலாம். அதைத் தெலுங்கில் டப் பண்ணலாம் சார்” என்றுகோரிக்கை வைத்தார். ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர

x