த்ரிஷா நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்றில் நானும் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையின் போது, நடிகை த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு பிரபல நடிகர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். நடிகை த்ரிஷாவுக்கு, நடிகர் அந்த இடத்தில் எல்லாம் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது எப்படி இருந்தது என தெரியவில்லை. ஆனால், எனக்கு அதைப் பார்க்கவே அறுவெறுப்பாக இருந்தது’’ என பிரபல சர்ச்சை நடிகை மீராமிதுன் கூறியுள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பல்வேறு நடிகர்களின் படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார். அந்தவகையில் நடிகை த்ரிஷாவை பற்றி மீரா மிதுன் பேசியுள்ள கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
”நான் த்ரிஷா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றில் சின்ன ரோலில் நடித்தேன். அப்போது அந்த செட்டில் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் எல்லாம் பிரபல நடிகர் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அது பார்க்கவே அறுவெறுப்பாக இருந்தது. இது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அந்த இடத்தில் அவரால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. த்ரிஷா அப்போது கோபப்பட்டு கத்தி விட்டால் அந்த பட வாய்ப்பு போய்விடும் என்று பயந்து சகித்துக் கொண்டிருந்தார்.
முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்” என்று மீரா மிதுன் பேசியுள்ளார். நடிகை மீரா மிதுனின் இந்த பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.