கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!


மமிதா

’பிரேமலு’ படப்புகழ் நடிகை மமிதா பைஜூ கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ‘வணங்கான்’ படத்தில் இருந்து தான் விலக இயக்குநர் பாலாதான் காரணம் என சொல்லி நடிகர் மமிதா சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மலையாளப் படங்கள் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ’பிரமயுகம்’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ வரிசையில் இணைந்த படங்களில் ‘பிரேமலு’வும் ஒன்று. இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை மமிதா பைஜூவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் திருமண நிகழ்வு ஒன்றில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். மஞ்சள், பச்சை நிறம் கலந்த புடவையில் இவரின் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படத்துல நல்ல டான்ஸ் நம்பர் கொடுங்கப்பா’ என உற்சாகத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

மமிதா

’பிரேமலு’ படத்தின் தமிழ் வெர்ஷனும் தற்போது ரிலீஸ் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க மமிதா முன்பு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க அதிக டேக் வாங்கியதால் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார்.

பின்பு, ”நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இயக்குநர் பாலா நன்றாகவே நடத்தினார். வேறு சில காரணங்களால் படத்தை விட்டு விலகினேன்” என்று சொல்லி பின் வாங்கினார். ஜிவி பிரகாஷூடன் இவர் நடித்துள்ள ‘ரெபல்’ திரைப்படம் தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

x