#Paruthiveeran Issue: போலியான வருத்தம்... ஞானவேலை கடுமையாக சாடிய இயக்குநர் சசிகுமார்!


போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலியிட முடியாது என இயக்குநர் சசிகுமார் ‘பருத்திவீரன்’ பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர்- நடிகர் கார்த்தி

’பருத்திவீரன்’ படத்தில் தயாரிப்பாளராகத் தன்னை இயக்குநர் அமீர் ஏமாற்றிவிட்டார் என ஞானவேல்ராஜா கொடுத்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அமீர் உண்மை தெரிந்த திரையுலகினரும் வாய் மூடி இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் பாரதிராஜா, சுதா கொங்கரா, கரு. பழனியப்பன், சமுத்திரக்கனி எனப் பலரும் அமீருக்கு ஆதரவு குரல் எழுப்பினர்.

இயக்குநர் அமீருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, இயக்குநர் சசிகுமாரும் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். 'பருத்திவீரன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை, அமீரிடம் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டார். இதற்குதான் சசிகுமார் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அமீர் அண்ணன் ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யானக் குற்றச்சாட்டுகள் என்ன? ’நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல். அந்த வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்தி விட்டு அவரே அவருக்கு வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?

இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?’ என்ற கேள்வியோடு, போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலியிட முடியாது என்ற தலைப்போடு இயக்குநர் சசிகுமார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


சென்னையில் பரபரப்பு... கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்:

x