பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி.முத்து புதிதாக வாங்கிய 20 லட்சரூபாய் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு ஜி.பி.முத்து பேசியுள்ளதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தனது வெகுளித்தனமான பேச்சால் சமூக ஊடகங்களில் பெயர் போனவர் யூடியூபர் ஜி.பி.முத்து. யூடியூபில் தனது வீடியோக்கள் மூலம் பிரபலமானவர், சினிமாக்களில் சில கதாபாத்திரங்களிலும் நடித்தார். பின்னர் பிக் பாஸ் தமிழின் ஆறாவது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.
ஆனால், கலந்து கொண்ட சில நாட்களிலேயே இவர் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முடியாமல் வெளியேறினார். அதன் பிறகு, 20 லட்ச ரூபாய் மதிப்பிலான புது கார் ஒன்றை வாங்கி இருப்பதாகத் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இவர் தனது காரில் குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று கொண்டிருந்போது எதிர்பாராமல் சந்தித்த விபத்து ஒன்றைக் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அங்கு ஒரு பாலத்தின் அருகே காரை நிறுத்தியபோது, அந்த வழியாக பைக்கில் தனது குழந்தையுடன் வேகமாக வந்த நபர் தெரியாமல் இவருடைய காரில் மோதி இருக்கிறார். இதனால் இவரது காரும், பைக்கும் சேதம் அடைந்துள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
பைக்கில் வந்தவரும் தன் மீதுதான் தவறு என்பதை ஒப்புக்கொண்டதாக ஜி.பி.முத்து கூறுகிறார். ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் கூட்டமாக கூடி இந்த சம்பவத்தை பெரும் பிரச்சனையாக்க முயற்சி செய்துள்ளனர்.
இதை ஜி.பி.முத்து ஒரு விளக்கமாக தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “விபத்தில் சம்பந்தப்பட்ட இருவருமே சமாதானமான பிறகும், சம்பவத்தை பார்த்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டும் என கருதி பேசி பெரிதாக்கினர். ஆனால், எங்களுக்குள் புரிதல் இருந்ததால் நாங்கள் சமாதானமாகப் போனோம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்:
ஈபிஎஸ் மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!