நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ கட்சியை பாஜகவில் நேற்று முன் தினம் இணைத்தார். இதற்கு பின்னணியில் அவரது மகள், நடிகை வரலட்சுமியின் போதை கடத்தல் வழக்கு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இன்று தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார் வரலட்சுமி.
தேர்தல் தேதி நெருங்குவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் கட்சிகளுக்கு மத்தியில் பரபரத்துக் கிடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.
“மதவாத அரசியலுக்குத் துணை போகும் கட்சிகளுக்கு ஆதரவு தரமாட்டேன்” என பாஜகவை வசை பாடிய சரத்குமார் இப்போது தனது கட்சியையே பாஜகவில் இணைத்தது பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால், “மக்கள் நலனுக்காகவே இந்த முடிவு” என தன்னிலை விளக்கம் கொடுத்தார் சரத்குமார்.
இதனிடையே, பாஜக - சமாக இணைப்பின் பின்னணியில் சரத் மகள் நடிகை வரலட்சுமியின் போதைப் பொருள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும் இதனால் அவருக்கு சிக்கல் வரலாம் என்பதாலேயே சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் கரைத்திவிட்டார் என்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த விஷயத்துக்குத்தான் இப்போது வரலட்சுமி மெளனம் கலைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பழைய பொய்ச் செய்தியை மீடியாக்கள் மீண்டும் பரப்பி வருவது வருத்தமாக இருக்கிறது. பிரபலங்களின் பழைய பொய்ச் செய்திகளை கிளறாதீர்கள். உண்மையிலேயே பேசுவதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. நாங்கள் அமைதியாக இருப்பதாலேயே பலவீனமாக இருக்கிறோம் என நினைத்து விடாதீர்கள். அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதையும், டிரெண்டிங் பின்னால் போக வேண்டும் என்பதையும் நிறுத்துங்கள்’ எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.
மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில் வரலட்சுமி குறித்துப் பரப்பப்படும் செய்திகளால் சரத்குமார் குடும்பம் பெரும் வேதனை அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!
பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!
அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!