கன்னட நடிகை பூஜா காந்திக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. நாற்பது வயதான பூஜாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நிச்சயமாகி நின்றது குறிப்பிடத்தக்கது.
கன்னட நடிகை பூஜா ’அனு’, ‘ஜிலேபி’, ‘ஜெய்ஹிந்த்’ உள்ளிட்டப் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, தமிழில் ‘வைத்தீஸ்வரன்’, ‘திருவண்ணாமலை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாது, அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் பூஜா. கடந்த 2013ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரெய்ச்சுரில் போட்டியிட்டார். அப்போது விதிகளை மீறி அதிக கார்களை உபயோகப்படுத்தினார் என்பதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுமட்டுமல்லாது, கடந்த 2019ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் நிறுவனம், பூஜா காந்தி மீது போலீஸில் புகார் அளித்து இருந்தது. அந்த புகாரில் பூஜா காந்தி ஓட்டலில் தங்கி 4.5 லட்சம் ரூபாயை கட்டாமல் தப்பிச் சென்றதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்தது. இந்த விஷயம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்போது படங்கள், அரசியல் என பிஸியாக வலம் வரும் பூஜாவுக்கு நாற்பது வயதாகிறது. தற்போது இவருக்குத் திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இவர் திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படும் விஜய், பெங்களூருவில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார். இவர்களது திருமணம் நாளை (நவம்பர் 29ம் தேதி) பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் நடைபெற இருக்கிறது. பூஜா காந்திக்கு விஜய்தான் கன்னடம் கற்றுக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!
கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!