‘விஜய் 69’ அரசியல் படமா?


விஜய் நடித்து கடந்த 5-ம் தேதி வெளியான ‘தி கோட்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதை அவர் ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருந்தார். விஜய்யின் 69-வது படமான இது அவரது கடைசி படம். முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கிறார். அறிவிப்பு போஸ்டரில் ஒரு கை தீப்பந்தத்தை பிடித்தபடி இருக்கிறது. அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாகும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் அக்டோபரில் படம் வெளியாக இருக்கிறது

x