ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து நடிகை அலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான டீப் ஃபேக் தொழில்நுட்பம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலைத் தொடர்ந்து தற்போது அலியா பட்டும் இதில் சிக்கியுள்ளார்.
'டீப் ஃபேக்' விவகாரம் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதனைத் தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக முன்பு தெரிவித்தார்.
மத்திய அரசால் இப்படியான எச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகும் கூட இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. தற்போது பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற ஒரு வீடியோவில் நடிகை அலியாவின் முகத்தை ரீப்ளேஸ் செய்து இந்த டீப் ஃபேக் வீடியோவை இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.
இது அலியாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை போலியாகப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!
'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'? திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!
பதற வைத்த பை... கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு!
சோகம்... குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!
வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!