சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!


மும்பை: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

’கங்குபாய்’, ‘ராம் லீலா’ போன்ற படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஹீரமண்டி’ மூலம் ஓடிடி தளத்திலும் தடம் பதித்தார். இதனை அடுத்து நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காவிய கதையாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது.‌ வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக எடுப்பதற்கு பெயர் போனவரான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மற்றப் படங்களைப் போலவே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்கிறார். படத்தின் அடுத்தடுத்த அப்டேட் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

x