தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் மரணம்!


தேசிய விருது வென்ற திரைப்படத் தொகுப்பாளர் எம்.என். ராஜா இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.

பார்த்திபன் இயக்கிய ’புதிய பாதை’, ’பொண்டாட்டி தேவை’, ’ஹவுஸ் ஃபுல்’ உள்ளிட்டப் பல படங்களில் படத்தொகுப்பாளராக பணி புரிந்தவர் திரைப்படத் தொகுப்பாளர் எம்.என். ராஜா. கடந்த 1999ல் வெளியான ‘ஹவுஸ்ஃபுல்’ திரைப்படத்தின் சிறந்த படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் அவர் இயற்கை எய்தினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜா, சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து செலுத்தி வருகின்றனர்.

x