நடிகர் விஜயின் ‘தளபதி 69’ பட அறிவிப்பு நாளை வெளியாகிறது!


சென்னை: நடிகர் விஜயின் 69ஆவது படம் குறித்தான அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது.

நடிகர் விஜய் இந்த வருடத் தொடக்கத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், தனது 69ஆவது படத்தில் இருந்து சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வசூல் ரீதியாக பாராட்டு பெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு ‘தளபதி 69’ படத்திற்குத் தயாராகி விட்டார் விஜய். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படம் விஜயின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்தான அறிவிப்பு நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியாகிறது.

இதுகுறித்தான வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. ’ஒன் லாஸ்ட் டைம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அவர் இனிமேல் படம் நடிக்க மாட்டார் என்பது பற்றிய வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர். விஜயின் 69 படங்களையும் ரீரிலீஸ் செய்து பார்ப்போம் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.

x