சொகுசு கார் வாங்கிய நடிகர் அஜித்... ஷாலினி பகிர்ந்த சூப்பர் அப்டேட்!


சென்னை: நடிகர் அஜித் புதிதாக வாங்கி இருக்கும் சொகுசு கார் ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விமானம், பைக் ஓட்டுவதில் மட்டுமல்லாது விதவிதமான கார் ஓட்டுவதிலும் நடிகர் அஜித் ஆர்வம் காட்டக் கூடியவர். சமீபத்தில் மின்னல் வேகத்தில் அவர் கார் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இப்போது வெள்ளை நிறத்திலான புதிய சொகுசு கார் ஒன்றை அவர் வாங்கி இருக்கிறார். Porsche GT3RS வகையை சார்ந்த இந்த சொகுசு காரின் விலை ரூ. 3.51 கோடி என சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'அஜித் அவருக்கான கார் வாங்கி இருக்கிறார். அஜித்தின் ஸ்டைல் எனது இதயத்தை நிரப்பி இருக்கிறது’ என்ற கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விட்டு வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இரண்டு படங்களின் அப்டேட்டையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

x