அன்பு மகளுக்கு 50 கோடியில் அமிதாப் தந்த காஸ்ட்லி கிஃப்ட்!


மகள் ஸ்வேதா பச்சனுடன் அமிதாப்பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மும்பை ஜூஹூவில் உள்ள தனது பிரதீக்ஷா பங்களாவை மகள் ஸ்வேதாவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன்

இரண்டு மனைகளுடன் கூடிய இந்த பங்களாவானது 890.47 சதுர மீட்டர் அளவுள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடியாகும். அமிதாப் தற்போது வசிக்கும் ஜல்சா வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் பிரதீக்ஷா வீடு அமைந்துள்ளது. அமிதாப் பச்சனால் முதன் முதலாக வாங்கப்பட்ட வீடு பிரதீக்ஷா ஆகும். அமிதாப் பச்சன் தற்போது நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவான கோன் பனேகா குரோர்பதியின் 14-வது சீசன் நிகழ்ச்சியின்போது, பிரதீக்ஷா வீட்டை மகளுக்கு வழங்கிய தகவலை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசும்போது, “பிரதீக்ஷா என்ற பெயர் எனது தந்தையால் வழங்கப்பட்டது. அவர் எழுதிய கவிதையில் இந்த வார்த்தை வருகிறது” எனக் குறிப்பிட்டார். பாலிவுட் நடசத்திரங்களான ஐஸ்வர்யா ராயுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் பிரதீக்ஷா வீட்டில் தான் திருமணம் நடைபெற்றது என்பதை மறந்துவிட இயாது.

அமிதாப் பச்சனின் பிறந்த நாள் அன்று, பிரதீக்ஷா வீட்டில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது மகள் ஸ்வேதா பச்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அன்றைய தினத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்து, 'நீங்கள் எப்போதும் எங்களை அன்பால் சூழ்ந்திருப்பீர்கள்' என குறிப்பிட்டிருந்தார் ஸ்வேதா.

x