சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா: கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு


சென்னை: நடிகர் ஜீவா சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது கார் கள்ளக்குறிச்சி அருகில் வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது. பைக் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது அருகில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து மாற்று காரில் ஜீவா தனது குடும்பத்தினரை அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

x