அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!


சமந்தா

மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை சமந்தா, பிரபல மேகசின் ஒன்றின் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நடிகை சமந்தா

படங்களில் நடிப்பது என்பதையும் தாண்டி நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களுடன் மிகவும் எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும் இடமாக சமூகவலைதளங்கள் இருக்கின்றன. இதில் மிகவும் ஆக்டிவான நபராக நடிகை சமந்தா இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பதிவிடுவது, கேள்வி பதில் என ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா. கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் நோயால் பாதித்துள்ள சமந்தா, அது தொடர்பாக தன்னுடைய அனுபவங்களையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது உடல்நலன் தொடர்பாக பாட் காஸ்ட் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். விரைவில் சினிமாவில் கம்பேக் கொடுக்கத் தயாராகியுள்ள சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நடிகை சமந்தா

சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே சமந்தா, மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது கல்லூரி நாட்களில் மாடலிங் செய்து அதன் மூலம் பாக்கெட் மணி பெற்றேன் எனத் தனது பேட்டிகளில் அவர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், அந்த மாடலிங் ஆர்வம் இப்போதும் தனக்குள் இருப்பதை அடிக்கடி வித்தியாசமான ஃபோட்டோஷூட் மூலம் தெரியப்படுத்தி வருகிறார் சமந்தா.

அந்த வகையில், தற்போது பிரபல இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு சமந்தா தைரியமாக வித்தியாசமான லுக்கில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்க ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x