சென்னை: ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜீனி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கபி உட்பட பலர் நடிக்கும் படம் ‘ஜீனி’. இதை மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
‘ஜீனி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அலாவுதீன் பூதத்தைப்போலவும் , கல்யாணி பிரியதர்சன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவதை வேடத்திலும் இருந்தனர்.
இப்படம் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்படும் படமாகும். இந்நிலையில் ஜெயம் ரவி பிறந்த நாளான இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நேற்று தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இன்று அவரது ‘ஜீனி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
Wishing a magical birthday to our #Genie, @actor_jayamravi!