செம மாஸ்... கேரள பெண்கள் கிரிக்கெட் தூதுவரானார் கீர்த்தி சுரேஷ்!


கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

'தசரா’, ‘மாமன்னன்’, ‘போலா ஷங்கர்’ ஆகிய படங்களை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் ’ரகுதத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ எனத் தனது ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் பிஸியாக உள்ளார். இதுமட்டுமல்லாது, அவர் ‘தெறி’ படத்தின் பாலிவுட் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைகிறது.

கீர்த்தி சுரேஷ்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நவம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20I போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்துள்ளார். மேலும், விழாவில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்தவரும் தேசிய அணியில் இடம்பெற்ற வீரருமான மின்னு மணியையும் கௌரவித்தார்.

கீர்த்தி சுரேஷ்

உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் முதல் தர மற்றும் சூப்பர் லீக் கட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தினார். மேலும் 2017-18ம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய T-20 சாம்பியன்ஷிப்பை வென்றது பற்றியும் கேட்டறிந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!

x