#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!


நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்த வருகிறார் நடிகர் அஜித். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அசர்பைஜன் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.

சூப்பர் பைக்கில் பயணித்த நடிகர் அஜித்குமார்

பைக் ப்ரியரான நடிகர் அஜித் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். தன்னைப் போலவே நீண்ட தூர பைக் ரைட்டிங் செல்பவர்களுக்கு உதவும் வகையில், புதிய சுற்றுலா நிறுவனம் ஒன்றையும் அஜித் சமீபத்தில் துவக்கி இருந்தார். இதனிடையே விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்களும் தொடர்ந்து நூதன முறையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். சென்னைக்கு திரும்பி உள்ள நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை

இந்நிலையில் திடீரென நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து நடிகர் அஜித்தின் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான சுரேஷ் சந்திரா, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றே அஜித் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

x