நடிகர் சல்மான்கான் படத்தில் இணைந்த காஜல் அகர்வால்!?


நடிகர் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’தர்பார்’ படத்திற்கு பின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தை அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘சிக்கந்தர்’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்காக, தாராவி போன்று பிரம்மாண்டமாக ரூ.15 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா, நடிகர் சல்மான்கான் என அடுத்தடுத்து நடிகர்கள் விபத்தில் சிக்கியது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் சமீபத்திய அப்டேட்டாக நடிகை காஜல் அகர்வால் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஏற்கனவே ராஷ்மிகா அறிவிக்கப்பட்ட நிலையில் காஜலின் கதாபாத்திரம் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x