தொடங்கியது துல்கர் சல்மானின் காந்தா


நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘காந்தா'. சுரேஷ் புரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா, தனது முதல் படமான இதன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கும் இதில் துல்கர் சல்மான், பாக்ய, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் வெங்கடேஷ், கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ராணா கூறும்போது, “‘காந்தா'வுக்காக வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

சுரேஷ் புரொடக் ஷன்ஸின் 60-வதுஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவின் தொடக்கத்துக்கும் இது சிறந்த படமாக இருக்கும்" என்றார். நடிகர் துல்கர் சல்மான், “இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்துக் காட்டும் அழகான கதை" என்றார்.

x