அஜித் படத்தை கிரிஞ்ச் என சொன்னதால் பிரபல இயக்குநர் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
மெஹர் ரமேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘போலோ ஷங்கர்’. இது நடிகர் அஜித் தமிழில் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் ஆகும். படம் நாளை மறுநாள் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ’வேதாளம்’ படத்தினை கிரிஞ்ச் என சொல்லி இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
”’போலோ ஷங்கர்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்து விட்டு நிறைய ‘கிரிஞ்ச்’ காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் சொல்வதை விட பத்து மடங்கு அதிக அளவிலான கிரிஞ்ச் காட்சிகள் ‘வேதாளம்’ படத்தில் இருக்கும். அதை எல்லாம் நான் அப்படியே படமாக்கவில்லை. அதற்குப் பதிலாக கதையின் ஒரு வரியை சிறிது மாற்றி புதிய படமாக எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். இது தான் அஜித் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
’போலோ ஷங்கர்’ திரைப்படம் குறித்து, ‘வேதாளம்’ திரைப்படத்தை கடந்த 2015ல் தான் பார்த்த போது பிடித்திருந்ததாகவும் கதை குறித்தும், படத்தில் அண்ணன்- தங்கைக்கு இடையேயான பிணைப்பு தனக்குப் பிடித்திருந்ததாகவும் இயக்குநர் மெஹர் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். மேலும், 2009ஆம் ஆண்டு அஜித்தின் ‘பில்லா’ படத்தினை நடிகர் பிரபாஸை கொண்டு ரீமேக் செய்ததாகவும், இப்போது மீண்டும் அஜித் சாரின் ‘வேதாளம்’ படத்தினை ரீமேக் செய்திருப்பது தனக்கு மகிழ்ச்சி எனவும்’ பதிவிட்டு இருக்கிறார். இப்படி மாறி மாறி இயக்குநர் பேசுகிறாரே ‘அது வேற வாய்’ என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.