ஹீரோவாகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தங்கராஜன்


விஜய் டி.வி.யில் வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உட்பட சில சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ‘யாத்திசை' தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிக்கிறார்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் குமரவேல், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். “அனைத்து தரப்பினரும் ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்” என்கிறது படக்குழு

x