அம்பானி மகன் திருமணத்தில் 'நாட்டு நாட்டு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட ’கான்’ ஹீரோக்கள்... வைரல் வீடியோ!


நாட்டு நாட்டு பாடலுக்கு ‘கான்’ நடனம்...

கடந்த மூன்று நாட்களாக நடந்த அம்பானி வீட்டுக் கல்யாணம்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக். இதில் பாலிவுட் ஹீரோக்கள் ஆடி, பாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

அம்பானி குடும்பம்...

மார்ச்1 ஆம் தேதி ஆரம்பித்து மூன்று நாட்கள் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் குஜராத்தில் களைக்கட்டியது. இதில் கிட்டத்தட்ட பாலிவுட்டில் இருந்து எல்லா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹாலிவுட்டில் இருந்து பிரபல பாடகி ரிஹானா கலந்து கொண்டார். இதற்காக மட்டும் அவருக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டது. மேலும், தங்களது மகன் குறித்து அம்பானியும் அவரது மனைவி நீடாவும் மேடையில் உருக்கமாகப் பேசினர். அதேபோல, ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் வந்திருந்த விருந்தினர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ந்தனர்.

ஷாருக்கான், அக்‌ஷய்குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் எனப் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களும், அலியா பட், தீபிகா, ஐஸ்வர்யா ராய் என ஹீரோயின்களும் சங்கீத்தில் ஆட்டம் ஆடி, பாடி மகிழ்ந்தனர். குறிப்பாக ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என மூவரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தினர். அதேபோல, தனது மனைவி, மகள் மற்றும் மகன் என குடும்பத்துடன் கலந்து கொண்ட ஷாருக்கான் ‘தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தார்.

அதேபோல, நடிகர் அக்‌ஷய்குமாரும் சங்கீத் நிகழ்ச்சியில் பாடல் பாடி அசத்தி இருக்கிறார். பாடிக் கொண்டே அங்கிருந்தவர்களுடன் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார் அக்‌ஷய். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

x