சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!


ரஜினி காந்த்

அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து முன்னிலும் வேகமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது ரசிகர்களிடையே வைரலான நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அமிதாப்- ரஜினி

படங்களின் வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்ற போதிலும் முன்னிலும் வேகமாக அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார்.

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்தப் படம் இன்னும் சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஜித்துடன் ரஜினி

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர், இந்தி பட இயக்குநர் சஜித் நாடியாட்வாலா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது, ரசிகர்களிடையே பரபரப்பானது. பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் படத்தில் ரஜினி நேரடியாக நடிக்கிறார் என குஷியில் இருந்தனர் ரசிகர்கள்.

தற்போது அந்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்காக ‘லால்சலாம்’ படத்தில் நடித்த ரஜினி, இளையமகள் செளந்தர்யா இயக்க போகும் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை சஜித் தயாரிக்கிறார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கப் போகும் படத்தின் கதை, ‘தாதா’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் பெங்கால் இளவரசர் சவுரவ் கங்குலியின் பயோபிக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். கங்குலியாக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கிறார். ஏற்கனவே, ஐஸ்வர்யா இயக்கிய ‘லால்சலாம்’ படத்தில் ரஜினி முழுக்கவே வந்திருந்தும் படம் எடுபடவில்லை என்கிற குறை ரஜினி ரசிகர்களிடையே இருந்து வரும் நிலையில், செளந்தர்யா ரஜினிக்கு ஹிட் கொடுப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

டொனால்ட் டிரம்பை தோற்கடித்து நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றார்!

x