படம் ஓடாததால் சம்பளத்தில் ரூ.4 கோடியை திருப்பிக் கொடுத்த ரவிதேஜா


ஹைதராபாத்: ரவிதேஜா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, சுபலேகா சுதாகர் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ‘மிஸ்டர் பச்சன்’. ஹரிஷ் சங்கர் இயக்கிய இந்தப் படம் இந்தியில் வெளியான ‘ரெய்டு’ படத்தின் ரீமேக். கடந்த ஆக. 15-ல் வெளியான இந்தப்படம் சுமார் ரூ.70 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் வெறும் ரூ.14 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தயாரிப்பாளரின் நஷ்டத்தை சரிகட்ட நடிகர் ரவி தேஜா தனது சம்பளத்தில் ரூ.4 கோடியையும் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர், ரூ.1 கோடியையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

x