காலில் விழுந்து பிக்பாஸ் வாய்ப்பை வாங்கிய கமல்... பிரபல பாடகி கடும் விமர்சனம்!


நடிகர் கமல்ஹாசன்

பிக் பாஸின் ஓனர் கமல்ஹாசன் இல்லை. அவரே இந்த வாய்ப்பை விஜய் டிவி காலில் விழுந்துதான் வாங்கி இருக்கிறார் என பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனிலும் கமல் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரதீப் விஷயத்தில் ரெட் கார்டு கொடுத்தது தவறு, நிக்சன் பெண்களை பாடி ஷேமிங் செய்ததைப் பற்றி விசாரிக்கவில்லை, மாயாவுக்கு அவர் நிறைய சுதந்திரம் கொடுக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை தனது சமீபத்திய பேட்டிகளில் முன் வைத்து வருகிறார்.

பாடகி சுசித்ரா

அந்த வகையில், அவர் தனது சமீபத்திய பேட்டியில், “கமல் ஒன்றும் பிக் பாஸ் ஓனர் கிடையாது. விஜய் டிவி காலில் விழுந்து அவருக்கு வாங்கிக் கொண்ட வாய்ப்பு இது. அவர் மக்கள் நீதி மய்யம் என்ற பன்றியை வளர்க்கிறார். அதை வைத்துக் கொண்டு வருகிற தேர்தலில் எல்லாம் அவர் வெற்றிப் பெற முடியாது” எனக் கடுமையாகப் பேசியுள்ளார். பொதுவில் கமல் பற்றி இப்படி அவதூறாக சுசித்ரா பேசியுள்ளது கமல் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x