தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை | உச்சத்தில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம்: இயக்குநர் செல்வமணி பேட்டி!


அரசியலுக்கு மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல. மக்கள் மிக மிக புத்திசாலி. மக்கள் மிகச் சரியாக முடிவெடுப்பார்கள் என தஞ்சாவூரில் இயக்குநர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள கோவில் ஒன்றிற்கு இயக்குநர் ஆர்.கே செல்வமணி சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “அரசியலுக்கு மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல. விஜய் அரசியலுக்குள் வந்த பிறகு அவருடைய பாலிசி என்ன, அவர் மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறார், மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார் என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும். சினிமாவில் அவரை நம்புவது போல அரசியலிலும் அவரை நம்புதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஹேமா கமிட்டி குறித்தான கேள்விக்கு, “எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் மிக வலிமையான அமைப்பு. அதனால் உச்சத்தில் இருக்கும் யார் தவறு செய்தாலும் கூட நாங்கள் தட்டிக் கேட்போம். சரி செய்ய முடியும். தமிழ் திரைத்துறையில் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இல்லை என்றுதான் நினக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது. இனிவரும் காலத்தில் சரியான முறையில் வழிநடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

x