`மாமன்னன்’ ரத்தினவேலுவை ஹீரோவாக்கிய நெட்டிசன்கள்... ஃபகத் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?


’மாமன்னன்’ ஃபகத்

'மாமன்னன்’ ரத்தினவேல் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் ஹீரோவாக்கியதற்கு ஃபகத் பாசில் ரியாக்ட் செய்துள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றிப் பெற்றது. மேலும், கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான பின்பு இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது. இதன் பிறகுதான் நெட்டிசன்கள் மத்தியில் நடிகர் ஃபகத் பாசிலின் ரத்தினவேலு கதாபாத்திரம் டிரெண்ட் ஆக ஆரம்பித்தது.

இந்தப் படத்தில் சுயசாதி பெருமை பேசும் வன்மம் நிறைந்த ரத்தினவேல் கதாபாத்திரத்தில் ஃபகத் நடித்திருந்தார். படத்தில் இவரது போர்ஷன்களை மட்டும் கட் செய்து, இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வந்த பாடல்களை இணைத்து சாதி பெருமை மிக்க ஹீரோவாக இவர் கதாபாத்திரத்தை சித்தரித்து இணையவாசிகள் டிரெண்ட் செய்து வந்தனர். ’வெறும் எடிட்தானே’ என சிலர் ரசித்தாலும், பலரும் இதனை விரும்பவில்லை என கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த டிரெண்டுக்கு பதிலளிக்கும் விதமாக இதுநாள் வரை தனது முகநூல் பக்கத்தில் ‘மாமன்னன்’ ரத்தினவேல் படங்களை கவர் பிக்காக வைத்திருந்த ஃபகத் அதனை நீக்கியுள்ளார்.

x