பிக்பாஸ் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதி: சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் விஜய்சேதுபதியின் சம்பளம் விவரம் வெளியாகி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இந்த எட்டாவது சீசனில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என விஜய் தொலைக்காட்சி தரப்பு புரோமோ மூலம் உறுதிப்படுத்தியது.

இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சி பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மூலம் மீண்டும் தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதிக்கு சம்பளமாக கிட்டத்தட்ட ரூ. 50 கோடி பேசப்பட்டிருக்கிறதாம். முன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 150 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x