நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில், பிரபல பாலிவுட் ஹிட் படம் ஒன்றில் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்றத் தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’, ‘வாடிவாசல்’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சூர்யா கவனம் செலுத்துவது அவரது ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டக் கதைகளான ‘ஜெய்பீம்’, ‘சூரரைப் போற்று’ படங்கள் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த நிலையில் அதேபோன்ற கதைகளையும் எடுப்பதில் சூர்யா ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், இதேபோன்ற உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹிட் படம் ஒன்றின் ரீமேக்கில் சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ’12th Fail’. இந்த திரைப்படம் மனோஜ் குமார் சர்மா என்பவருடைய வாழ்க்கையை தழுவி எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விது வினோத் சோப்ரா என்பவர் இயக்கிய அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை சூர்யா பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ தகவல்கள விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.