முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ. கருப்பையா நடிகர் விஜயின் அரசியல் நகர்வு, தற்போதைய திமுக ஆட்சி, கள்ளச்சாராய சாவு, காவிரி பிரச்சினை உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்து இந்த காமதேனு தமிழ் யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் பேசியுள்ளார்.
அரசியல் களத்திற்கு வர ஆசைப்படும் நடிகர் விஜயின் செயல்பாடுகள் அதை நோக்கியே உள்ளது. ஒருவேளை நாளை அவர் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு உங்கள் ஆதரவு இருக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் ஒரு எளிய மனிதன். என்னுடைய ஆதரவு அவருக்கு இருக்குமா இல்லையா என்பதைத் தாண்டி மக்களின் ஆதரவுதான் அவருக்கு முக்கியம். மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வும் செயல்பாடும் அவரால் கொடுக்க முடியும் என்றால் நாளை அவர் நிகரற்ற தலைவராக வருவார்.
நான் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற கட்சி ஆரம்பித்து சில மாதங்களாகிறது. காவிரி பிரச்சினை, டிரான்ஸ்போர்ட் பிரச்சினை என தற்போதைய பல பிரச்சினைகளுக்கு நான் தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அப்படி நடிகர் விஜயும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல வேண்டும். அவருக்கு அந்தக் காலக்கட்டம் வரும்போது நிச்சயம் அதை செய்ய வேண்டும். அப்போதுதான் தொலைநோக்கு வெற்றியை அவரால் பெற முடியும். கருத்து வைக்கும் போது நிச்சயம் எதிர்ப்பு வரும்.
மோடி அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. சிறுபான்மை மதத்தில் பிறந்த நீங்கள் அதற்கு குரல் கொடுங்கள். அப்போதுதான் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும்”.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!