ஆமா... கஞ்சா அடிச்சிருக்கேன்... இயக்குநர் ராஜூ முருகன் ஓபன் ஸ்டேட்மென்ட்!


நடிகர் கார்த்தி

கஞ்சா அடிக்கும் பழக்கம் தனக்கு இருந்ததாகவும், பொதுச் சமூகத்திற்கு பயப்படுவது போன்ற மோசமான செயல் வேறு இல்லை என ‘ஜப்பான்’ பட இயக்குநரான ராஜூ முருகன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜூமுருகன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தி, நடிகை அனு இமானுவேல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் ‘ஜப்பான்’ படம் வெளியானது. இந்தப் படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கியிருந்தார். கார்த்தியின் 25-வது படமாக உருவாகியுள்ள இது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், படம் குறித்தான சமீபத்திய பேட்டி ஒன்றில், தனக்குக் கஞ்சா அடிக்கும் பழக்கம் இருப்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார் ராஜூ முருகன்.

இயக்குநர் ராஜூமுருகன்

இதுகுறித்து அவர் பேட்டியில், “ஆமாம், நான் முன்பு கஞ்சா அடித்திருக்கிறேன். அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகவும் இருந்தேன். பொது சமூகத்துக்கு பயப்படுவதை விட மிக மோசமான செயல் வேறு எதுவும் இல்லை. பொதுச் சமூகம் என்பதே பல இதயங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். தவறு என்பதே சித்தரிப்புதான்” என அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


x