இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் பார்த்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வாழை’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இந்தப் படத்தை முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் பார்த்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் ஸ்டாலின்.
அங்கு ‘வாழை’ படத்தைப் பார்த்தவர், ‘உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் 'வாழை' படத்தை கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்த சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் வாழ்த்துக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…