உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த திடீர் ரெட் கார்ட் பிரச்சனையால் இந்த வார சனிக்கிழமை எபிசொட்டில் கமல் என்ன பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஒருவாரமாக காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல நேற்று குறும்படங்களை போட்டு போட்டியாளர்களை கதிகலங்க வைத்தார் கமல்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. பிக்பாஸ் இல்லம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், தீபாவளி வாழ்த்துக்களுடன் கமல்ஹாசன் தொடங்குகிறார்.
அதில், ‘’ உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை வண்ணம் இல்லாமல் அனைவரும் கொண்டாடுகள்’’ என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் போட்டியாளர்கள், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படப்பாடலுக்கு நடனம் ஆடி கமலுக்கு அதிர்ச்சி அளித்தனர். அதனை கமலும் ரசித்தவாறு நின்றார்.