பணத்தின் மதிப்பு தனக்கு புரிய வைத்த ஒரு சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவில் பிரபலமடைந்த பிறகு அந்தப் பிரபலங்கள் பகிரக்கூடிய தங்களது கடந்த கால சம்பவங்கள் அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இதுபோன்ற கதைகளைக் கேட்க ரசிகர்களும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அப்படித்தான், பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி பணத்தின் மதிப்பு தனக்கு புரிய வைத்த பழைய சம்பவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். இவர், சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘12th ஃபெயில்’ படம் மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பகிர்ந்துள்ள அந்த சம்பவம், “என் தாய் நன்றாக சமைப்பார் என்பதால் ஒருமுறை என் நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன். என் வீட்டில் அழகாக இல்லாத சமையலறை, ஒழுகும் சீலிங், பிளாஸ்டிக் நாற்காலிகளை பார்த்து வந்து வேகத்தில் என் நண்பர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அன்று தான் பணத்தின் மதிப்பு எனக்குப் புரிந்தது. பின்பு, தொலைக்காட்சியில் வேலை பார்த்து சொந்த வீடு வாங்கினேன். கடன் எல்லாம் அடைத்தேன். ஆனாலும், எனக்கு நிம்மதியாக தூக்கம் இல்லை.
24 வயதில் மாதம் ரூ. 35 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு, படத்தில் நடிக்கும் வாய்ப்புத் தேடி அலைந்தேன். அப்போது என் மொத்த சேமிப்பும் தீர்ந்தபோது என் மனைவி ஷீத்தல் தான் எனக்கு ஆடிஷன், பாக்கெட் மணி கொடுத்து உதவினார்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். இப்போது விக்ராந்த் மாஸ்ஸி ஒரு படத்திற்கு ரூ. 75 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்கின்றன பாலிவுட் ஊடகங்கள்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!