விமர்சனங்களை விலக்கி திருமணத்தில் இணைந்த சின்னத்திரை ஜோடி... குவியும் வாழ்த்துகள்!


நிவேதிதா- சுரேந்தர்

“எனக்கு விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் ஆகி விட்டது. மரியாதைக் குறைவான கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்” என அண்மையில் தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார் சின்னத்திரை நடிகை நிவேதிதா. இன்று இவருக்கு திருமணம் நடந்தேறி இருக்கிறது.

நிவேதிதா- சுரேந்தர்

முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ள நிவேதிதாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். ’வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’, ’திருமகள்’, ‘சுந்தரி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நிவேதிதா. இவர் ‘மகராசி’ சீரியலில் நடித்த போது தன்னுடன் நடித்த ஆர்யன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் நிவேதிதா தற்போது புது வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.

நிவேதிதா- சுரேந்தர்

’திருமகள்’ சீரியலில் நடித்த போது, அதில் கதாநாயகனாக நடித்த சுரேந்தர் என்பவருடன் நிவேதிதாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் காதலிப்பதையும், ஏற்கெனவே நடந்த திருமணம் விவாகரத்தாகி விட்டதையும் ஊரறியக் கூறினார் நிவேதிதா.

மேலும், விவாகரத்துப் பெற்று மூன்று வருடங்கள் ஆனதால், தன் வாழ்க்கைக் குறித்து மரியாதைக் குறைவானக் கேள்வியைக் கேட்பதைத் தவிர்த்து விடுங்கள் எனவும் அப்போது கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று நிவேதிதா - சுரேந்தர் திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது. விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!

x