மறைந்த நடிகர் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே. சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ. 43 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுதீஷ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரக்கூடியவர் சந்தோஷ் சர்மா. அவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த குடியிருப்பில் சுமார் 78 வீடுகளை வாங்க சுதீஷ் மனைவி பூர்ண ஜோதி ரூ. 43 கோடியைக் கொடுத்து, இதற்கான ஒப்பந்தத்தையும் சந்தோஷ் சர்மாவிடம் போட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி வீடுகள் தராமல், 48 வீடுகளை வேறு நபருக்கு சந்தோஷ் சர்மா விற்றுள்ளார். அத்துடன் பூர்ண ஜோதி அளித்த பணத்தையும் மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் பூர்ண ஜோதி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பில்டர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம் என்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!
குட்நியூஸ்... பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நாளை முதல் ஆதார் பதிவு!
கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!
50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!