பிக்பாஸ் மாயா ஒரு லெஸ்பியன்!: போட்டுடைத்த பாடகி சுசித்ராவுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்க முடிவு


மாயா கிருஷ்ணன்

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் மாயா லெஸ்பியன் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாடகி சுசித்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக மாயா குடும்பத்தினர் போலீஸில் புகார் அளிக்க உள்ளதாக பின்னணி பாடகி ஸ்வாகா தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா

’’மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்க்கு தெரியும். ஆனால், பூர்ணிமாவுக்குத் தெரியாது. ஆனால் மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சினை. மாயா இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநரிடம் தான் உறவில் இருந்தார்’’ என பாடகி சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் மாயா பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். இதற்கு மாயாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாடகி ஸ்வாகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன்வைத்தது கண்டிக்கத்தக்கது.

மாயாவின் செயல்களைத் தவறாக சித்தரிக்கும் மற்றும் லெஸ்பியன் மக்களின் வாழ்க்கையைச் சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதபமாக இருக்கிறது. தனக்கு வெளி உலகில் நடக்கும் அவமானங்களையும், அநீதிகளை பற்றி எந்த அறிவிப்பு இல்லாத சூழலில் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவு ஆளர்களுக்கும் நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.

x