'விடுதலை2' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!


சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர் உள்ளிட்டப் பலரது நடிப்பில் ‘விடுதலை’ படம் வெளியானது. ‘துணைவன்’ என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவானது.

இரண்டாவது பாகத்தின் கதை நடிகர் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தை சுற்றியே அதிகம் அமைந்திருக்கும். விஜய்சேதுபதி-மஞ்சுவாரியரின் காதல் போர்ஷன் படத்தில் இடம்பெற்றிருப்பதால் அவர்களை இளமையாகக் காட்ட டீ-ஏஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. இளையராஜா இசையில் ’விடுதலை2’ திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை வாரத்தை ஒட்டி படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதிக்கு ‘மகாராஜா இந்த வருடம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. ‘ட்ரெயின்’ படமும் வெளியாக உள்ளது. சூரிக்கும் ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்கள் பெயர் வாங்கித் தந்தது. அந்த வரிசையில் இருவருக்கும் ‘விடுதலை2’ படமும் வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

x