சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிகர் நாகர்ஜூனா இணைந்துள்ளார்.
’வேட்டையன்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். ரெட்ரோ லுக்கில் ரஜினியின் தோற்றமும் அவரது கோல்டன் கலர் வாட்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
பான் இந்தியா படமாக உருவாகும் இதில் மற்ற மொழிகளிலும் இருந்தும் முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். நேற்று மாலையில் இருந்து படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படப்புகழ் செளபின் ஷாஹிர் ‘கூலி’யில் இணைந்திருக்கிறார்.
இன்று நடிகர் நாகர்ஜூனாவின் பிறந்தநாள். அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாகர்ஜூனா ‘கூலி’ படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kicked to have King @iamnagarjuna sir joining the cast of #Coolie as #Simon
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 29, 2024
Welcome on board and wishing you a very happy birthday sir @rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/Vv7wqA25VA