நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி சமூக ஆர்வலர் புகார் மனு!


நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடிகர் விஜய் தவெக கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடத்துவதற்காக அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிற பேதத்தை ஊக்குவிக்கும் மற்றும் சாதிய வெறியை தூண்டும் வகையிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வடிவமைத்து வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 கீழ் கடும் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் மனு கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரபாண்டியில் நடைபெற தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக பாடலில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை தாக்குவது போல் அறிமுகம் செய்த பாடல் ஆசிரியர் மீதும் ஒளிப்பதிவாளர் மீதும் தலைவர் மீதும் பொதுச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறை இயக்குனருக்கு சமூக ஆர்வலர் செல்வம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x