கூலியில் இணைந்தார் சவுபின் சாகிர்


ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் படம், ‘கூலி’. அவரின் 171-வதுபடமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் உபேந்திரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் இந்தி நடிகர் ஆமிர்கான், கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகர் சவுபின் சாகிர் இணைந்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படம் மூலம் தமிழிலும் பிரபலமானார்.

‘கூலி’யில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

x