படப்பிடிப்புக்கு பெண்கள் துணைக்கு ஆள் கூட்டிட்டு வரணும் | நடிகை ஊர்வசி


படப்பிடிப்புத் தளத்தில் பெண்கள் தங்கள் துணைக்கு ஆட்களைக் கூட்டி வந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கத் தேவையில்லை என நடிகை ஊர்வசி பேசியிருக்கிறார்.

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கையின் எதிரொலியாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவரோடு 16 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருக்கின்றனர். ஆனால், அனன்யா, டொவினோ தாமஸ் உள்ளிட்ட சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி நடிகை ஊர்வசி சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில், “மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், இந்தி என அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. சினிமாத் துறை தாண்டி அனைத்துத் துறைகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கதான் செய்கிறது.

மலையாள நடிகைகள் மிகவும் தைரியமானவர்கள். தங்களுக்கு நேர்ந்த இந்தப் பிரச்சினை இனி வரும் தலைமுறையினருக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக தைரியமாக முன்வந்து தங்கள் பாதிப்புகளை சொல்லி வருகின்றனர். இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடக்காமல் இருக்க பெண்கள் தங்கள் துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டும்” என்று பேசியுள்ளார்.

x