THUG LIFE | மணிரத்னத்துடன் மிரட்டலாக களமிறங்குகிறார் கமல்ஹாசன்!


நடிகர் கமல்ஹாசன் மணிரத்னத்துடன் இணையும் புதிய படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் விழாவையொட்டி இப்போதில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். நேற்று ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் அப்டேட்டை காலையில் இருந்தே படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

‘தூங்காவனம்’, ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைகிறார். நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவியும் படத்தில் இருப்பதை தெரிவித்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் முகம் முழுவதும் மூடியபடி கண்கள் மட்டும் தெரிய பின்னால் புழுதி பறக்கும் இந்த போஸ்டர் வெளியானதில் இருந்தே கவனம் பெற்றது. தற்போது தலைப்பும் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x