அரசியல் த்ரில்லரில் பிரஜின்


மலையாளத் திரைப்படக் குழுவினர் உருவாக்கியுள்ள தமிழ்ப் படம், ‘சேவகர்'. அரசியல் த்ரில்லர் படமான இதில், பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். ஆர். டி. மோகன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரதீப் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார்.

“அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ஒருவர் பிரஜின். அரசியல்வாதி ஆடுகளம் நரேன். இவருக்கு போலீஸ் அதிகாரிகள் துணை போகிறார்கள். அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் இணைப்புப் பின்னல் இருக்கிறது. அதை நாயகன் எப்படி ஒழிக்கிறார் என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றது படக்குழு.

x