காதலர் தின ஸ்பெஷல்... மகன்களுக்கு முத்தமிட்டு கொஞ்சிய நயன்தாரா; சூப்பர் போட்டோஸ்!


மகனுடன் நயன்தாரா...

காதலர் தின ஸ்பெஷலில் நடிகை நயன்தாரா தனது இரு மகன்களையும் கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கியூட்டான இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

மகனுடன் நயன்தாரா...

காதலர் தின ஸ்பெஷலில் பலரும் தங்களது இணைக்கு காதலைத் தெரிவித்தும் வாழ்த்துகளைக் கூறியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து வரக்கூடியவர் இந்த வருடம் ஒரு அம்மாவாக தனது இரு மகன்களைக் கொஞ்சி முத்தமிட்டு அணைத்தபடி இருக்கும் கியூட்டானப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மகனுடன் நயன்தாரா...

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘என் உயிர், உலக் இருவரையும் நான் அதிகம் நேசிக்கிறேன். என்னுடைய இந்த வருடக் காதலர் தினத்தை முன்பெப்போதும் விட சிறந்ததாக்கியதற்கு நன்றி’ என உருகியுள்ளார் நயன்தாரா. மேலும், இருமகன்களுக்கும் ரோஜா கொடுத்தும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். குட்டீஸூக்கும் நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடிக்கும் ரசிகர்கள் தங்கள் காதலர் தின வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்... அதிர்ந்து போன அமீரகம்!

ஒரு மகன் போனாலும் ஓராயிரம் மகன்கள், மகள்கள் உள்ளனர்... சைதை துரைசாமி உருக்கம்!

x