#AK63 : நண்பர் மறைவால் அஜித் எடுத்த முடிவு... ரசிகர்கள் அப்செட்!


நடிகர் அஜித்

தனது நண்பர் வெற்றி துரைசாமி மறைவால், இன்று அறிவிப்பதாக இருந்த தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை தள்ளிவைத்திருக்கிறார் நடிகர் அஜித்.

அஜித்- வெற்றிதுரைசாமி

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலைப் பயணத்திற்கு சென்றவரது இந்த எதிர்பாராத மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா இயக்குநரான வெற்றி, நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரும் கூட. பைக் டிரிப் பயணத்தின் போது நடிகர் அஜித்துடன் வெற்றி இணைந்து அவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. மேலும், வெற்றி சினிமாவுக்குள் வர அஜித்தும் ஒரு முக்கிய காரணம் எனவும் இவரது இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு கொண்ட வெற்றியின் மறைவுக்கு அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன்

நண்பரின் இந்த எதிர்பாராத மறைவால் அஜித் தாங்கமுடியாத சோகத்தில் இருக்கிறார். இதுபோன்ற சமயத்தில் தன்னுடைய படங்கள் குறித்தான அப்டேட்களை வெளியிடுவது சரியாக இருக்காது என்பது அஜித்தின் முடிவு என்கிறார்கள்.

இதனால், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தை அடுத்து அவரது 63-வது படத்திற்கான அறிவிப்பு இன்று காலை 9 மணியளவில் வெளிவருதாக இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஆனால், வெற்றி துரைசாமி இறப்பால் இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x