"கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்" என்று நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார். இவர், இயக்குநர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் துவாரகா கோயிலுக்கு சென்றிருந்த கங்கனா ரனாவத்திடம் செய்தியாளர்கள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கங்கனா, "கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!