நடிகை ரகுல் ப்ரீத் தனது காதலருடன் கோவாவில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமண அழைப்பிதழ் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தமிழ் சினிமா நடிகைகளின் கல்யாண சீசன் இதுபோல. சமீபத்தில் நடிகைகள் கார்த்திகா நாயர், கீர்த்தி பாண்டியன் என அடுத்தடுத்து நடிகைகளின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இந்த வரிசையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இணைந்துள்ளார். ஏற்கெனவே இவர் காதலருடன் நிச்சயம் முடிந்துவிட்டது விரைவில் திருமணம் என்ற செய்தி வலம் வந்த நிலையில் தற்போது ரகுலின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. 'தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாகி இருக்கிறது.
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரைத்தான் காதலித்து வருகிறார் ரகுல். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி தனது காதலை அறிவித்தது. இந்த வருடம் பிப்ரவரி 22ம் தேதி கோவாவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற உள்ளது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். கடற்கரைப் பின்னணியில் இயற்கை சூழலுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் இணையத்தில் டிரெண்டாக, இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!